Whispers of Love
The poem portrays the emotional intensity of the Lady's Love sickness, likening her delicate journey to that of a woodpecker carrying a Mullai Flower after the rain.
Natrinai 61
கேளாய், எல்ல தோழி! அல்கல்
வேணவா நலிய, வெய்ய உயிரா,
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக,
துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,
துஞ்சாயோ, என் குறுமகள்? என்றலின்,
சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,
படு மழை பொழிந்த பாறை மருங்கில்
சிரல் வாய் உற்ற தளவின், பரல் அவல்,
கான் கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ? என்றிசின், யானே.
- சிறுமோலிகனார்
Transliteration:
Kēḷāy, ella tōḻi! Alkal
vēṇavā naliya, veyya uyirā,
ē māṉ piṇaiyiṉ varuntiṉeṉ āka,
tuyar maruṅku aṟintaṉaḷ pōla, aṉṉai,
tuñcāyō, eṉ kuṟumakaḷ? Eṉṟaliṉ,
col veḷippaṭāmai mella eṉ neñcil,
paṭu maḻai poḻinta pāṟai maruṅkil
ciral vāy uṟṟa taḷaviṉ, paral aval,
kāṉ keḻu nāṭaṟ paṭarntōrkkuk
kaṇṇum paṭumō? Eṉṟiciṉ, yāṉē.
-Ciṟumōlikaṉār
Meaning:
Listen, my friend!
Last night I was distressed with
desire for my lover and was in deep
pain like a doe pierced by an arrow.
I sighed deeply, and mother asked me,
“Are you not sleeping, my daughter?”
as though she knew my great sorrow.
Words didn’t come out of my mouth,
but quietly I said to my heart,
“How could I close my eyes when I am
thinking about my man from the country
with lovely forests, heavy rains, and
golden jasmine flowers that grow near rocks
on gravel pits, looking like beaks of kingfishers.”
பொருள்:
கேளடி என் தோழி ! நேற்றிரவு தலைவன் மீது கொண்டுள்ள அதீத அன்பாலும் அவனை விலகி இருப்பதும் அடிபட்ட பெண் மான் போன்றதொரு வலியை எனக்குள் தந்தது. என் வலியை உணர்ந்தார் போல் என் தாய், குறு மகளே! நீ உறங்காமல் இருக்கிறாயா என்று வினவினாள்.
நான் பதில் ஏதும் சொல்லாமல் என் மனதில் சொன்னேன். கடும் மழை பொழிந்த பள்ளத்தாக்கையும் கூழாங்கற்களையும் கொண்டுள்ள காட்டினுள் உள்ள கற்பாறையின் மீது மெல்லிய முல்லை மலருடன் ஏறும் மீன்கொத்தியை உடையது அவன் நாடு. அத்தகைய நாட்டில் உள்ள தலைவனை விலகி இருந்தால் எனக்கு எப்படி உறக்கம் வரும் ?.
தளவம் (Thalavam) - முல்லை (Jasmine), அவல் (Aval) - பள்ளத்தாக்கு (Shallow Depression)